லத்தீன் மொழயில் 'வைட்டா' என்றல் உயிர் என்று அர்த்தம் .பெயருக்கு ஏற்றார் போல் உடல் சோர்வு நீக்கி அன்றாடம் நம்மை உற்சாகமாக வைப்பது இந்த வைட்டமின்கள் தான் .எ,பி,சி,டி......என்று பல வகை உண்டு .அவற்றை பற்றி பார்ப்போம் .
வைட்டமின் "எ"
வைட்டமின் "எ"
இதற்க்கு அழகு வைட்டமின் என்று இன்னொரு பெயரும் உண்டு .பளிச் கண்களை பெறலாம்.பொடுகை கட்டு படுத்துவதோடு கூந்தல் வளர்சிக்கும் உதவும்.பற்கள், நகங்கள் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்யும் .பருக்கள் வருவதை தடுத்து சருமத்தின் மினுமினுப்புக்கு வழிவகுக்கும் .மாலைக் கண் நோய் வருவதை தடுத்து நுண்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது .
வைட்டமின் 'ஏ' குறையும் போது சருமம் வறண்டு ,நகங்கள் உடைந்து ,கண்களின் கீழ் கருவளையங்கள் தோன்றி வீங்கி காணப்படும் கண் கோளாறுகள் தலையெடுக்கும் .
அன்னாசி ,மாம்பழம் ,ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழங்களிலும் கேரட் 'தக்காளி ,பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளிலும்,பால் பொருட்களிலும் மீன் ,கோழிக்கறி ஆகிய மாமிசப் பொருட்களிலும் வைட்டமின் ஏ அபரிமிதமாக கிடைக்கிறது.