Thursday, December 30, 2010

சரும பாதுகாப்பு

வணக்கம்,
         இன்று பனி காலத்திற்கான சரும பாதுகாப்பு பற்றிய சிறு குறிப்பு ,பனி காலத்தில் நம் சருமம் வறண்டு காணப்படும்,ஆதலால் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் 15 .ml  எடுத்து இதமாக சூடுபடுத்தி,உடல் முழுவதும் தேய்த்து 30 நிமிடங்கள்   ஊறவைத்து பின் கடலை மாவு அல்லது பயத்த மாவு தேய்த்து குளித்து வந்தால்,சருமம் வறட்சி இல்லாமலும்,பொலிவுடனும் காணப்படும்.இதை பனிக்காலம் முழுவதும் தினமும் செய்து வரவும். 

குறிப்பு :

  •  வறண்ட சருமம் (Dry Skin) உள்ளவர்கள் பனிக்காலத்தில் மட்டும் அல்லாமல் எல்லா பருவங்களிலும் செய்து கொள்ளலாம்.
  •  எண்ணெய் சருமம் (oily skin) உள்ளவர்கள் பனிகாலத்தில் தினமும் மற்ற காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை பின் பற்றலாம்

Wednesday, December 29, 2010

ஜலதோஷ நிவாரணி

வணக்கம்
        இது மார்கழி மாதம் , பனி பெய்வதால் நம்முள் பலருக்கு பனி ஒத்துக்கொள்வதில்லை.இதனால் தொண்டை வலி,மூக்கு அடைப்பு,காது வலி மற்றும் ஜலதோஷம்  ஏற்படுகிறது ,அதனால் இவையனைத்தையும் எதிர்கொள்ள  எளிய அஞ்சறைப்பெட்டி  வைத்தியம்,இதோ 

  தேவையானவை
  • 2 வெற்றிலை,
  • 10 துளசி,
  • 4 கற்பூரவல்லி,
  • 7 அல்லது 8 மிளகு,
  • 1/4 teaspoon சீரகம்.
செய்முறை :

இவை  எல்லாம்  2 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.கொதித்து 1 .1 /2   டம்ளர் ஆனவுடன் இறக்கி,காலை 1/2 டம்ளர்  ,இரவு 1/2 டம்ளர் தினமும் குடித்து வந்தால்  தொண்டை வலி,மூக்கு அடைப்பு,காது வலி மற்றும் ஜலதோஷம் தொல்லை இருக்காது.இந்த கஷாயத்தை இந்த பனிக் காலம் முழுதும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் தரும்.

Tuesday, December 28, 2010

அஞ்சறைப்பெட்டி- திறப்பு விழா

வணக்கம்,
          இந்த அஞ்சறைப்பெட்டி வலைப்பதிவின் மூலம் , நம் சமையலறையில் இருக்கின்ற மிளகு,சீரகம்,வெந்தையம் போன்ற பொருட்களில் உள்ள மருத்தவ குணங்களையும் மற்றும் அழகு தரும்

சிறப்புகளையும் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என என்னால் இயன்றவரை சேகரித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்