இன்று பனி காலத்திற்கான சரும பாதுகாப்பு பற்றிய சிறு குறிப்பு ,பனி காலத்தில் நம் சருமம் வறண்டு காணப்படும்,ஆதலால் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் 15 .ml எடுத்து இதமாக சூடுபடுத்தி,உடல் முழுவதும் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் கடலை மாவு அல்லது பயத்த மாவு தேய்த்து குளித்து வந்தால்,சருமம் வறட்சி இல்லாமலும்,பொலிவுடனும் காணப்படும்.இதை பனிக்காலம் முழுவதும் தினமும் செய்து வரவும்.
குறிப்பு :
- வறண்ட சருமம் (Dry Skin) உள்ளவர்கள் பனிக்காலத்தில் மட்டும் அல்லாமல் எல்லா பருவங்களிலும் செய்து கொள்ளலாம்.
- எண்ணெய் சருமம் (oily skin) உள்ளவர்கள் பனிகாலத்தில் தினமும் மற்ற காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை பின் பற்றலாம்
No comments:
Post a Comment