Thursday, February 10, 2011

சமையறையில் உள்ள சில...

வணக்கம்,
         இன்று சமையறையில் உள்ள சில பொருட்களில் இருக்கும் அழகு படுத்தும் குணங்களை பற்றி பார்ப்போம்.முதலில் 
அரிசி
 சோப்பில் கூட போகாத அழுக்குகள் மூக்கு நுனியிலும் மூக்கின் ஓரங்களிலும் தேங்கி நின்றுவிடும்.பால் கலந்த அரிசி மாவு கொண்டு ஸ்க்ரப் (SCRUB) போல தேய்த்தால் அழுக்குகள் எல்லாம் காணமல் போய்விடும். 
பிரட்  
     பிரட் துண்டுகளை பாலில் ஊற வைத்து முகத்தின் அழுக்கை நீக்கும் ஸ்க்ரப்பாக உபயோகிக்கலாம்.முகத்தை மென்மையாக மாற்றவும் இது உதவும்
சோயா
      சோயா மாவில் பாலும் சில துளி  தேனும் கலந்து பேஸ்ட் தயாரித்து முகத்துக்கு பேக் (PACK) போட்டுக்கொண்டால் முகம் பளிச்சென்று  புத்துணர்ச்சி பெறும்.

No comments:

Post a Comment