Tuesday, February 22, 2011

இன்று கேரட்,வெள்ளரி,சர்க்கரை ........

வணக்கம்,
 
                 இன்றும் சில சமையலறையில் உள்ள அழகு தரும் பொருட்களை பற்றி பார்ப்போம்




கேரட் 
           
          
         வைட்டமின் 'ஏ' சத்து கொட்டிக் கிடக்கும் புதையல் கிடங்கு .மசித்து அப்படியே PACK போடலாம் .அல்லது சாரு எடுத்து அதை PACK- களில் கலந்தும் போடலாம் .கேரட் சருமத்திற்கு நல்ல நிறம் தர வல்லது 







வெள்ளரி 

         எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிக நல்லது .முகத்துக்கு நல்ல குளிர்ச்சியும்  புத்துணர்ச்சியும் தரவல்லது .






சர்க்கரை 
        இதையும் முக SRCUB-ஆகா உபயோகிக்கலாம் .வழுவழுப்புக்காக முதலில் முகத்தில் சோப்பு தேய்த்து அதன்பின் ஒரு கைப்பிடி சர்க்கரையை சேர்த்து மசாஜ் செய்யவும் .கடைசியாக இரண்டு சொட்டு எலுமிச்சம் சாரு கலந்த ஒரு கப் தண்ணீரில் முகத்தை கழுவிக் கொண்டால் அழுக்கு நீங்கி முகம் பளபளக்கும் ,மென்மையாகவும் இருக்கும் .சொரசொரப்பான கைகள்      மென்மையவதர்க்கும் எலுமிச்சை ஜுசுடன் சர்க்கரை சேர்த்து கைகளில் மசாஜ் செய்து பின் கழுவிவிடாவும் .

டீ ( TEA)
         தோல் பொரிவது ,தோல் எரிச்சல் போன்றவற்றை தடுத்து காயங்களையும் ஆற்றவல்லது .டீ டிக்கக்ஷனில் (TEA Decation )  முகம் கழுவிக்கொண்டால் முகம் மென்மையாக இருக்கும் .கண்ணெரிச்சல் இருந்தாலோ வீக்கம் இருந்தாலோ டீ டிக்கக்ஷனில் பஞ்சு நனைத்து மூடிய கண் மேல் வைத்து ஓய்வு எடுத்தால் சரியாகும் . 


உங்கள் கருத்துகளை ஒவ்வொரு இடுகையின்( POST ) கீழ் உள்ள comment box -ல் பதிவு செய்யவும்,மேலும் உங்களுக்கு தேவையான தனிப்பட்ட ஆலோசனைகள் பெற கீழ்க்கண்ட மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.



நன்றி மீண்டும் நாளை சந்திபோம்.

திருமதி.தனலட்சுமி முத்துராமலிங்கம் ,DBCT.I.Tec(LON)
                                                                  Esthetician and Aroma Therapist

No comments:

Post a Comment