வணக்கம்,
இன்று நாம் சமையலறையில் அன்றாடம் பயன்ப்படுத்தும் உப்பு,பால்,முதலியவற்றில் உள்ள அழகு தரும் சிறப்பு குணங்களை பார்ப்போம்..முதலில்
உப்பு
களைப்பை போக்கும் அற்புதமான மருந்து .வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கழுவிக் கொண்டால் முகம் புத்துணர்ச்சி பெரும். வெதுவெதுப்பான உப்பு நீரில் கை கால்களை இருபது நிமிடம் ஊறவைத்தால் இறந்த செல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெரும்.முகத்தின் சிறு மேடு பள்ளங்களில் இருக்கும் அழுக்கை அகற்றும் SCRUB ஆகவும் பயன்படுத்தலாம்.
பால்
முகத்தை சுத்தப்படுத்த உதவும் எளிய பொருள் .தனியாகவும் முகத்தில் தடவலாம் PACK க்குகளிலும் சேர்க்கலாம் .தோலுக்கு தேவையான உணவு பாலில் இருக்கிறது .முகத்தை ஈரப்பதமகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும் பால் குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்களுக்கு ஏற்றது .மோர்
முகத்தை சுத்தப்படுத்தவும் பிளீச் (BLEACH) செய்து முகத்துக்கு நிறம் தரவும் மோர் உபயோகப்படும் .எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது
மருதாணி
மருதாணி,முடிக்கு நல்ல கண்டிஷனர் .முட்டையுடன் சேர்த்தோ தனியாகவோ தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளிக்கலாம் .டீ டிகாக்ஷன் (Tea Decation)சேர்த்தால் நரைமுடிக்கு கலர் கிடைக்கும் .வறண்ட முடி உடையவர்கள் ஆலிவ் ஆயிலை சேர்த்து உபயோகிக்கலாம.
No comments:
Post a Comment