Friday, February 18, 2011

அழகு தரும் காய்கள்

 வணக்கம் ,
                    இன்று காய்களில் உள்ள அழகு தரும் சிறப்பு அம்சங்களை பார்ப்போம் 

                                                         முட்டைகோஸ்
          முகத்தின் தோலை பொலிவாக வைத்திருப்பதற்கு தேவையான தாதுப்பொருட்களும் விட்டமின்களும் இதில் இருக்கின்றன.சமையலுக்கு வேக வைக்கும்போதே அறை டம்பளர் தண்ணீர் கூடுதலாக வைத்து அந்த தண்ணீரை உபயோகித்து PACK போடலாம் .



                                                        வெங்காயம்                
                           

        இது சிறந்த கிருமிநாசினி .முகத்தில் ஆங்காங்கே இருக்கும் நிற மாற்றங்களையும்,சிறுசிறு மேடு பள்ளங்களையும் போக்க வெங்காய சாற்றை முகத்தில் தடவிக்கொண்டு மூன்று நிமிடம் காயவிட்டு கழுவிக்கொள்ளலாம் வெங்காயத்தை மசித்து  நாலைந்து சொட்டுகள் தேன் சேர்த்து PACKபோட்டுக்கொண்டால் முகசுருக்கம் நீங்கும்
  உருளைக்கிழங்கு
                             இது பளிச்சென்று துடைத்து வைத்தாற் போல் முகத்தை மாற்ற வல்லது தோலின் சுருங்கி  விரியும் "எலாஸ்டிக் " தன்மையை பாதுகாக்கவும் உதவுகிறது .கண் வீங்கி உப்பலாக இருந்தால் உருளைக்கிழகை வில்லைகளாக சீவி  கண்மேல் வைத்து இருபது நிமிடம் ஓய்வு எடுத்தல் சரியாகிவிடும் .உருளை ஜூசை தனியாகவும் PACK  குகளிலும் உபயோகிக்கலாம் .



No comments:

Post a Comment