Wednesday, February 16, 2011

இன்றும் மேலும் முகம் மற்றும் சருமத்திற்க்கான சில குறிப்புகள்

வணக்கம்,
                   இன்றும் மேலும் முகம் மற்றும் சருமத்திற்க்கான  சில குறிப்புகள்
பாதாம் பருப்பு



                          முகத்தை இளமையுடன் வைத்திருக்க உதவும் வைட்டமின் E சத்து நிறைத்தது .ஒரு பாதாம் பருப்பை பால் சேர்த்து மஞ்சள் கிழங்கு போல் உரசி முகத்தில் தேய்த்து காய்ந்தபின் கழுவிவிடவும் .வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிக நல்லது .பாதாம்  எண்ணையை லேசாக சூடுபடுத்தி மயிர்க்கால்களில்  தேய்த்து குளித்தால் முடி பளபளக்கும்.
ஆலிவ் ஆயில்




                        வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிக நல்லது .குளிப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்  முகம்,கை,கைகளில் ஆலிவ் ஆயில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் தோல் மென்மையவது மட்டுமல்ல,கலரும் கொடுக்கும் .முகத்தை மசாஜ் செய்வதற்கு ஆலிவ் ஆயிலை உபயோகிக்கலாம் தோலுக்கு தேவையான சத்துக்களும் இதில் இருக்கின்றன .

கடலை மாவு
                        
                 அழுக்கை நீக்கி தோல் மினுமினுக்க கடலை மாவை SCRUB -ஆக  உபயோகிக்கலாம் .முகத்தில் வழியும் அதிகபடியான எண்ணைப் பசையை போக்கி தோலுக்கு தேவையான புரதசத்து தரவல்லது . பாலேடு  கலந்து PACK -காக போட்டால் முகத்தின் தசைகளை இறுக்கி இளமையை தக்கவைக்கும் 

No comments:

Post a Comment