Tuesday, February 22, 2011

இன்று கேரட்,வெள்ளரி,சர்க்கரை ........

வணக்கம்,
 
                 இன்றும் சில சமையலறையில் உள்ள அழகு தரும் பொருட்களை பற்றி பார்ப்போம்




கேரட் 
           
          
         வைட்டமின் 'ஏ' சத்து கொட்டிக் கிடக்கும் புதையல் கிடங்கு .மசித்து அப்படியே PACK போடலாம் .அல்லது சாரு எடுத்து அதை PACK- களில் கலந்தும் போடலாம் .கேரட் சருமத்திற்கு நல்ல நிறம் தர வல்லது 







வெள்ளரி 

         எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிக நல்லது .முகத்துக்கு நல்ல குளிர்ச்சியும்  புத்துணர்ச்சியும் தரவல்லது .






சர்க்கரை 
        இதையும் முக SRCUB-ஆகா உபயோகிக்கலாம் .வழுவழுப்புக்காக முதலில் முகத்தில் சோப்பு தேய்த்து அதன்பின் ஒரு கைப்பிடி சர்க்கரையை சேர்த்து மசாஜ் செய்யவும் .கடைசியாக இரண்டு சொட்டு எலுமிச்சம் சாரு கலந்த ஒரு கப் தண்ணீரில் முகத்தை கழுவிக் கொண்டால் அழுக்கு நீங்கி முகம் பளபளக்கும் ,மென்மையாகவும் இருக்கும் .சொரசொரப்பான கைகள்      மென்மையவதர்க்கும் எலுமிச்சை ஜுசுடன் சர்க்கரை சேர்த்து கைகளில் மசாஜ் செய்து பின் கழுவிவிடாவும் .

டீ ( TEA)
         தோல் பொரிவது ,தோல் எரிச்சல் போன்றவற்றை தடுத்து காயங்களையும் ஆற்றவல்லது .டீ டிக்கக்ஷனில் (TEA Decation )  முகம் கழுவிக்கொண்டால் முகம் மென்மையாக இருக்கும் .கண்ணெரிச்சல் இருந்தாலோ வீக்கம் இருந்தாலோ டீ டிக்கக்ஷனில் பஞ்சு நனைத்து மூடிய கண் மேல் வைத்து ஓய்வு எடுத்தால் சரியாகும் . 


உங்கள் கருத்துகளை ஒவ்வொரு இடுகையின்( POST ) கீழ் உள்ள comment box -ல் பதிவு செய்யவும்,மேலும் உங்களுக்கு தேவையான தனிப்பட்ட ஆலோசனைகள் பெற கீழ்க்கண்ட மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.



நன்றி மீண்டும் நாளை சந்திபோம்.

திருமதி.தனலட்சுமி முத்துராமலிங்கம் ,DBCT.I.Tec(LON)
                                                                  Esthetician and Aroma Therapist

Monday, February 21, 2011

உப்பு,பால்

வணக்கம்,

                    இன்று நாம் சமையலறையில் அன்றாடம் பயன்ப்படுத்தும் உப்பு,பால்,முதலியவற்றில் உள்ள அழகு தரும் சிறப்பு குணங்களை பார்ப்போம்..முதலில் 

உப்பு
                         களைப்பை போக்கும் அற்புதமான மருந்து .வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கழுவிக் கொண்டால் முகம் புத்துணர்ச்சி பெரும். வெதுவெதுப்பான உப்பு நீரில் கை கால்களை இருபது நிமிடம் ஊறவைத்தால் இறந்த செல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெரும்.முகத்தின் சிறு மேடு பள்ளங்களில் இருக்கும் அழுக்கை அகற்றும் SCRUB ஆகவும் பயன்படுத்தலாம்.

பால்
                         முகத்தை சுத்தப்படுத்த உதவும் எளிய பொருள் .தனியாகவும் முகத்தில் தடவலாம் PACK க்குகளிலும் சேர்க்கலாம் .தோலுக்கு தேவையான உணவு பாலில் இருக்கிறது .முகத்தை ஈரப்பதமகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும் பால் குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்களுக்கு ஏற்றது .




மோர்
                      
                                                                                                                                             முகத்தை சுத்தப்படுத்தவும் பிளீச் (BLEACH) செய்து முகத்துக்கு நிறம் தரவும் மோர் உபயோகப்படும் .எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும்  நல்லது








மருதாணி 
                   
                  மருதாணி,முடிக்கு நல்ல கண்டிஷனர் .முட்டையுடன் சேர்த்தோ தனியாகவோ தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளிக்கலாம் .டீ டிகாக்ஷன் (Tea Decation)சேர்த்தால் நரைமுடிக்கு கலர் கிடைக்கும் .வறண்ட முடி உடையவர்கள் ஆலிவ் ஆயிலை சேர்த்து உபயோகிக்கலாம.

Friday, February 18, 2011

அழகு தரும் காய்கள்

 வணக்கம் ,
                    இன்று காய்களில் உள்ள அழகு தரும் சிறப்பு அம்சங்களை பார்ப்போம் 

                                                         முட்டைகோஸ்
          முகத்தின் தோலை பொலிவாக வைத்திருப்பதற்கு தேவையான தாதுப்பொருட்களும் விட்டமின்களும் இதில் இருக்கின்றன.சமையலுக்கு வேக வைக்கும்போதே அறை டம்பளர் தண்ணீர் கூடுதலாக வைத்து அந்த தண்ணீரை உபயோகித்து PACK போடலாம் .



                                                        வெங்காயம்                
                           

        இது சிறந்த கிருமிநாசினி .முகத்தில் ஆங்காங்கே இருக்கும் நிற மாற்றங்களையும்,சிறுசிறு மேடு பள்ளங்களையும் போக்க வெங்காய சாற்றை முகத்தில் தடவிக்கொண்டு மூன்று நிமிடம் காயவிட்டு கழுவிக்கொள்ளலாம் வெங்காயத்தை மசித்து  நாலைந்து சொட்டுகள் தேன் சேர்த்து PACKபோட்டுக்கொண்டால் முகசுருக்கம் நீங்கும்
  உருளைக்கிழங்கு
                             இது பளிச்சென்று துடைத்து வைத்தாற் போல் முகத்தை மாற்ற வல்லது தோலின் சுருங்கி  விரியும் "எலாஸ்டிக் " தன்மையை பாதுகாக்கவும் உதவுகிறது .கண் வீங்கி உப்பலாக இருந்தால் உருளைக்கிழகை வில்லைகளாக சீவி  கண்மேல் வைத்து இருபது நிமிடம் ஓய்வு எடுத்தல் சரியாகிவிடும் .உருளை ஜூசை தனியாகவும் PACK  குகளிலும் உபயோகிக்கலாம் .



Wednesday, February 16, 2011

இன்றும் மேலும் முகம் மற்றும் சருமத்திற்க்கான சில குறிப்புகள்

வணக்கம்,
                   இன்றும் மேலும் முகம் மற்றும் சருமத்திற்க்கான  சில குறிப்புகள்
பாதாம் பருப்பு



                          முகத்தை இளமையுடன் வைத்திருக்க உதவும் வைட்டமின் E சத்து நிறைத்தது .ஒரு பாதாம் பருப்பை பால் சேர்த்து மஞ்சள் கிழங்கு போல் உரசி முகத்தில் தேய்த்து காய்ந்தபின் கழுவிவிடவும் .வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிக நல்லது .பாதாம்  எண்ணையை லேசாக சூடுபடுத்தி மயிர்க்கால்களில்  தேய்த்து குளித்தால் முடி பளபளக்கும்.
ஆலிவ் ஆயில்




                        வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிக நல்லது .குளிப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்  முகம்,கை,கைகளில் ஆலிவ் ஆயில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் தோல் மென்மையவது மட்டுமல்ல,கலரும் கொடுக்கும் .முகத்தை மசாஜ் செய்வதற்கு ஆலிவ் ஆயிலை உபயோகிக்கலாம் தோலுக்கு தேவையான சத்துக்களும் இதில் இருக்கின்றன .

கடலை மாவு
                        
                 அழுக்கை நீக்கி தோல் மினுமினுக்க கடலை மாவை SCRUB -ஆக  உபயோகிக்கலாம் .முகத்தில் வழியும் அதிகபடியான எண்ணைப் பசையை போக்கி தோலுக்கு தேவையான புரதசத்து தரவல்லது . பாலேடு  கலந்து PACK -காக போட்டால் முகத்தின் தசைகளை இறுக்கி இளமையை தக்கவைக்கும் 

Tuesday, February 15, 2011

இன்று வேறு சில பழங்களை பார்ப்போம்

வணக்கம்,
                    இன்று வேறு சில பழங்களை பார்ப்போம்
                    பப்பாளி
               இதில் தோலுக்கு மிக  தேவையான "ஆல்பா ஹிட்ராக்சி ஆசிட்ஸ்" (AHA) இருக்கிறது,தோலில் தங்கிவிடும் இறந்த செல்களை வெளியேற்றி ,தோலை மென்மை படுத்தவும்,ஈரப்பததை காப்பாற்றவும் ,தோலை இறுக்கத்துடன் வைத்திருக்கவும் இது உதவுகிறது.முகத்தின் மெல்லிய சுருக்கங்களை போக்குகிறது .இளமையை காப்பாற்றும் இந்த  "ஆல்பா ஹிட்ராக்சி ஆசிட்ஸ்" (AHA) பப்பாளியில் மிக அதிகமாக உள்ளது.ஒரு துண்டு பப்பாளியை மசித்து இரண்டு சொட்டு தேன் சேர்த்து  முகத்தை மசாஜ் செய்யலாம் அல்லது pack-காக  உபயோகிக்கலாம்.
                                                      திராட்சை 
 
               முகத்தை "ப்ளீச்" (BLEACH) செய்து பளீர் நிறம் தருவதற்கு உதவும் .திராட்சை.ஜூசை முல்தானி மெட்டி கலந்து PACK-காக போடலாம் .எண்ணெய் பசை உள்ளவர்களுக்கு மிக நல்லது .



ஆரஞ்சு பழம்
               
வைட்டமின் 'சி' சத்து கொண்டது.அதன் சாறை எடுத்து முல்தானி மெட்டி கலந்து PACK -காக உபயோகித்ததால்  முகம் பொலிவுறும்.ஆரஞ்சு பழத்தின் தோலை காயவைத்து பவுடர் செய்து PACK-களில் சேர்த்துக் கொள்ளலாம்   

Monday, February 14, 2011

அழகு தரும் பழங்கள்

வணக்கம்,
              இன்று பழங்களில் உள்ள அழகு தரும் விஷயங்களை பற்றி பார்ப்போம்,முதலில் 

வாழைப்பழம்
: தோலுக்கு சிறந்த உணவு .
கனிந்த வாழைப்பழத்தை மசித்து pack-காக போடுக்கொல்ள்ளலாம்.

கேசத்திற்கு வாழைப்பழ pack :
பழுத்த வாழைப்பழம்       : 2
தேன்                                         : 1 Tb spoon        

பாதாம் ஆயில்                    : 2 -5  சொட்டு
முட்டை மஞ்சள் கரு       :1

                                                                                        எல்லாவற்றைவும் நன்றாக மசித்து பேஸ்ட் போல் செய்துக் கொள்ளவும்.முடியை ஈரப்படித்திக்கொண்டு,இந்த பேஸ்ட் டை தலையில் தடவிக்கொள்ளவும்.ஒரு shower cap கொண்டு தலையை கவர் செய்யவும் .அரை மணி நேரம் கழித்து, ஷாம்பூ கொண்டு அலசிவிடவும்.இந்த pack பொடுகை போக்கி ஈரபதத்தை தக்கவைக்கும்.

ஆப்பிள்       
                எண்ணைப் பசையுள்ள சருமத்திற்கு மிக நல்லது .சிபஸ்-க்கு உருளயை சீவுவது போல் ஆபீளை நீள வாக்கில் மிக மெல்லிதாக,சீவி ,முகத்தில் இடைவெளி இன்றி பரப்பிவிடுங்கள் பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவிக்கொண்டால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளக்கும் .ஆப்பிளை மசிதும் போடலாம் .தோலுக்கு தேவையான சத்துக்களும் இதில் மிகுதுள்ளன.

தர்பூசணி பழம்

                 வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தை சுத்தபடுத்தவும் புத்துணர்ச்சி பெறவும் தர்பூஸ் வில்லைகளை முகத்தில் படரவிட்டு சில நிமிடம் கழித்து கழுவிவிடாவும் 

Friday, February 11, 2011

சமையலறையில் இருந்து இன்று

வணக்கம் ,

          சமையலறையில் இருந்து இன்று

  தேன்:
          ஈரப்பததை தக்க வைத்து முகத்தை மென்மையாக்க உதவுகிறது.தோலுக்குத் தேவையான உணவை தந்து பளிச்சிடச் செய்கிறது.தனியாகவோ அல்லது முக பேக்குகளில்(pack) கலந்தோ உபயோகிக்கலாம்.  

புதினா
       இது பருக்களின் எதிரி அரைத்து பருவின் மேல் போட்டால் பரு போய்விடும்.சாரு எடுத்து இரவில் முகத்தில் பூசி காலை கழுவிவிடவும்.தொடர்ந்து செய்து வர நல்ல நிறம் கிடைக்கும்.

தக்காளி
        தக்காளியை நறுக்கி மூக்கின்மேல் உள்ள blackheads மீது தேய்த்து மசாஜ்  செய்தால் blackheads குறையும்.எண்ணெய் பசையை சரிபடுதுகிறது.

         வெள்ளரி சாரு -1 டீஸ்பூன்
        புதினா சாரு   - 1/2 டீஸ்பூன்
        படிகரதத் துள்  -ஒரு சிட்டிகை
        இதை முல்தானி மிட்டி and முட்டை வெள்ளை கருவுடன் கலந்து pack போடவும்.இது முக சுருக்கத்தை போக்கும் அற்புதமான pack


Thursday, February 10, 2011

சமையறையில் உள்ள சில...

வணக்கம்,
         இன்று சமையறையில் உள்ள சில பொருட்களில் இருக்கும் அழகு படுத்தும் குணங்களை பற்றி பார்ப்போம்.முதலில் 
அரிசி
 சோப்பில் கூட போகாத அழுக்குகள் மூக்கு நுனியிலும் மூக்கின் ஓரங்களிலும் தேங்கி நின்றுவிடும்.பால் கலந்த அரிசி மாவு கொண்டு ஸ்க்ரப் (SCRUB) போல தேய்த்தால் அழுக்குகள் எல்லாம் காணமல் போய்விடும். 
பிரட்  
     பிரட் துண்டுகளை பாலில் ஊற வைத்து முகத்தின் அழுக்கை நீக்கும் ஸ்க்ரப்பாக உபயோகிக்கலாம்.முகத்தை மென்மையாக மாற்றவும் இது உதவும்
சோயா
      சோயா மாவில் பாலும் சில துளி  தேனும் கலந்து பேஸ்ட் தயாரித்து முகத்துக்கு பேக் (PACK) போட்டுக்கொண்டால் முகம் பளிச்சென்று  புத்துணர்ச்சி பெறும்.

Wednesday, February 9, 2011

SKIN TAN

வணக்கம்

         இன்று நாம் பார்க்கபோவது முகம் பொழிவுடன் இருக்க சில டிப்ஸ்.
இனி வருவது வெயில் காலம்,சருமம் கருமை (SKIN TAN) ஆவது உண்டு.இதற்க்கு சில எளிய வழிமுறைகள்

 செய்முறை
              எலுமிச்சை சாரு - 1/2 டீஸ்பூன் 
              காரட் சாரு      - 1 டீஸ்பூன் 
              கடலைமாவு     - 1 டீஸ்பூன்
     இவற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து மிதமான வெந்நீர் கொண்டு கழுவிவிடவும்.

              ஆரஞ்சு சாரு     - 2 டீஸ்பூன் 
              எலுமிச்சை சாரு  - 2 டீஸ்பூன் 

எடுத்து கெட்டி தயிருடன் கலந்து முகத்தில் பூசி காய்ந்தவுடன் கழுவிவிடவும். இந்த இரண்டு Tips-யை  மாற்றி மாற்றி செய்து வந்தால் முகம் பொழிவுடன் ஜொலிக்கும்.
இந்த Tips-யை Skin Tan உள்ள மற்ற இடங்களிலும் (hands and neck)   செய்துகொள்ளலாம்